Advertisement

பள்ளி மாணவியாக தீபிகா படுகோனே ; லீக்கான வீடியோ

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிறகு தற்போது முதல் படமாக சப்பக் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தீபிகா படுகோனே. கடந்த 2005ல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்பவரின் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.

தற்போது படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இந்தபபடத்தில் தீபிகா படுகோனே பள்ளி மாணவியாக நடித்துவரும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் லீக் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் தீபிகா படுகோனேவும் அவரது தோழியும் பள்ளிக்கு வெளியே உள்ள கடை ஒன்றில் சிற்றுண்டி வாங்கி சாப்பிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement