Advertisement

இன்ஸ்டாகிராமில் பிரபாஸ் போட்ட முதல் பதிவு!

பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படமும் பாகுபலியைப்போலவே தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகியுள்ளது.
மேலும், பாகுபலி-2 படத்தில் நடித்து வந்தபோதே இன்ஸ்டாகிராமில் இணைந்தார் பிரபாஸ். ஆனால் . 769 கே பாலோயர்ஸ் பின்தொடர்ந்து வந்தநிலையில், இதுவரை அவர் ஒரு பதிவுகூட போட்டதில்லை. அதனால் அவரை ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.
இந்தநிலையில், தற்போது முதன்முறையாக பாகு பலி-2 படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சியில் தான் நடித்த ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார் பிரபாஸ். அதற்கு ஏராளமானோர் லைக் கொடுத்து வருகிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement