Advertisement

தான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்

கெளதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் துருவநட்சத்திரம். விக்ரமுடன் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகி விட்டது. அதன் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டாவை இயக்கினார் கெளதம்மேனன். ஆனால் இந்த இரண்டு படங்களுமே இன்னும் திரைக்கு வரவில்லை.
இந்தநிலையில், துருவநட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், தனது டுவிட்டரில் இப்படத்தை கலாய்த்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது, தனது டுவிட்டரில் துருவ நட்சத்திரம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் பார்த்தி என்பவர் இயக்கிய குறும் படம் ஒன்றை பதிவிட்டுள்ள பார்த்திபன், இந்த பார்த்தி இயக்குனராகும்போது துருவநட்சத்திரம் வெளியாக வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி தான் நடித்த ஒரு படத்தையே பார்த்திபன் கிண்டல் செய்திருப்பது துருவநட்சத்திரம் படக் குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இதெல்லாம் ஒரு செய்தியா ஐயா

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

    இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து விட்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement