Advertisement

'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்?

தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்குப் பிறகு மேலும் சில பிரம்மாண்டமான படங்கள் தயாராகி வருகின்றன. அதில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'சை ரா' படமும் முக்கியமானது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு 2017ம் ஆண்டு கடைசியில் ஆரம்பமானது.

சரித்திரக் காலப் படம் என்பதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. வெளிநாடுகளிலும் கடந்த ஆண்டு முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டது. தற்போது கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை முதலில் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், விஎப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் பட வெளியீடு அடுத்த ஆண்டு தள்ளிப்போகும் என்கிறார்கள். 2020 பொங்கலுக்குத்தான் படம் வெளியாகும் சூழல் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement