Advertisement

இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு

நடிகர் வடிவேலு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த தேர்தல் திருவிழாவிற்கு சமம். மக்கள் யோசித்து ஒரு தடவைக்கு பத்து தடவை சிந்தித்து ஓட்டு போடுங்கள் என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இன்றைக்கு உள்ளங்கையில் உலகம் இருக்கிறது. ஒவ்வொரு பிள்ளைகளின் கையில் செல்போன் இருக்கிறது. யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. அவர்களே சந்தித்து ஓட்டளிக்கிறார்கள். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என பெற்றோர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும். அனைவரும் நலமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை கண்ணீர் சிந்த விடாமல் காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்" என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • bal - chennai,இந்தியா

  முதல்ல கேவலமா பேசிதான் வீட்டுக்கு அனுப்பப்பட்டது..இன்னுமா திமிர் அடங்கலை...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர்களுக்கு ஏன் அரசியல்? ஒழுங்காக நடித்து வரவேண்டியதுதானே? என்னவோ எல்லோரும் முதல்வர் கனவில் திளைக்கின்றனர். அழிவுகாலம் தான்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  யார் ஆட்சி வந்தாலும் நீங்கள் தொடர்ந்து நடித்தால் போதும். நாங்கள் கவலை மறந்து மகிழ்ச்சியாக இருப்போம்.

 • Girija - Chennai,இந்தியா

  பெண்பாவம் பொல்லாதது ஜிவி உன்னிடம் கொடுத்த அட்வான்ஸை ஒழுங்கா அவர் மனைவியிடம் திருப்பிக்கொடுத்துவிடு .

 • madhavan rajan - trichy,இந்தியா

  எதற்கு இப்படி சொல்கிறார். இந்த தேர்தலுக்கு பிறகு திமுகவை கலைத்து விடப்போகிறார்களா? அல்லது அந்த கட்சி காணாமல் போய்விடும் என்று நம்புகிறீர்களா?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  வடிவேலுவின் எதிர்காலம் மங்கியது ஏன்?

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  அட போங்க வடிவேல், இன்னும் தேர்தல் முடிவு வருவதற்குள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோல், மால், சித்து வேலை செய்து பாஜக இந்தியா முழுமையிலும் வெற்றி பெற்றதாக கள்ள ஆட்டம் ஆடப் போகிறது. அப்புறம் எங்கே விடிவு காலம் ஏற்படுவது? அஸ்தமனம்தான்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   அட என்ன EVM மணி. EVM EVM அப்படின்னு ஒரே டயலாக்கை பேசி, "திரும்ப திரும்ப அதையே சொல்லுற" அப்படிங்கற வடிவேலு காமடி மாதிரியே நீங்களும் ஆயிட்டீங்களே.

  • nicolethomson - bengalooru,இந்தியா

   இப்பவேவா மணி ?

 • ar saravanan - tiruchirapalli,இந்தியா

  நீரெல்லாம் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு மக்களின் தரம் கெட்டுவிட்டது

 • Bhaskaran - Chennai,இந்தியா

  எந்தக்கட்சிஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு எது விடிவுகாலம் காங்கிரெஸ் வந்தால் செட்டியாரும் காவி தொடர்ந்தால் ஜெட்லீயும் வரிகளைப்போட்டு மக்களை வதைப்பார்கள்

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  திரைப்படத்தில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் காமெடியன் என்பதை ஓட்டு போடுமிடத்தில் நடனமாடி நிரூபித்து விட்டார் வைகைபுயல்.

 • oce - chennai,இந்தியா

  இந்த தேர்தலுக்கு பின் மக்களுக்கு விடிவு காலம். உன் கட்சிக்கு முடிவு காலம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement