Advertisement

மகனை இயக்குகிறாரா விக்ரம்?

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க, பாலா இயக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்ட 'வர்மா' படத்தை அதன் தயாரிப்பாளர் கைவிட்டார். அதைத் தொடர்ந்து, இப்படம் வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் அதாவது 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் வங்காவின் உதவியாளர் கிரிசாயா இயக்கத்தில், துருவ் விக்ரமே கதையின் நாயகனாக நடிக்க, படு வேகமாக உருவாகி வருகிறது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீ-மேக்கான இப்படத்திற்கு 'ஆதித்ய வர்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை பனிதா சந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துருவ் விக்ரம், பனிதா சந்துவுடன் இப்படத்தில் பிரியா ஆனந்தும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ரதன் இசை அமைத்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது. போர்ச்சுகலில் நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமும் கூடவே இருக்கிறார். அவ்வப்போது தானே இயக்குநராகி மாறி துருவ்வை இயக்கி வருகிறார் விக்ரம். அதனால்தான் பாலாவுக்கு பதில் பிரபல இயக்குநரை வைத்து படத்தை எடுக்காமல் புதுமுக இயக்குநரை கமிட் பண்ணியுள்ளனர் என்கின்றனர்.

இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும், 'ஆதித்ய வர்மா'வை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் அடிபடுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement