Advertisement

தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம்

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இரண்டு நடிகைகளும் நேற்று தங்களது படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது விகாராபாத்தில் இருந்து அவர்கள் ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரில் ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்ததால், விபத்து ஏற்படாமல் தவிர்க்க, காரை டிரைவர் வேகமாக திருப்பியபோது அது அருகில் இருந்த மரத்தில் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த சீரியல் நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். கார் டிரைவர் மற்றும் இன்னொருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement