Advertisement

தெலுங்கு சினிமாவில் டிடி

விஜய டிவியில் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி, நளதமயந்தி, சரோஜா, பவர்பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கவுதம் மேனின் துருவநட்சத்திரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் டைரக்டர் பூரி ஜெகன்னாத்தின் மகன் ஆகாஷ் பூரி நாயகனாக நடித்து வரும் ரொமான்ட்டிக் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் டிடி. அதன் முதல்கட்ட படப்பிடிப்புக்காக கோவா சென்று வந்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் திவ்யதர்ஷினி.

அனில் படுரி இயக்கும் இந்த படத்தில் கேதிகா சர்மா, மந்த்ராபேடி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பூரி ஜெகன்னாத் இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement