Advertisement

ராதாவை நீக்குங்கள் : ராதாரவிக்கு விஷால் கண்டனம்

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவியின் சர்ச்சையான பேச்சுக்கு நடிகர் விஷால் டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பெண்களை மட்டுமல்லாது, ஆண்கள் மனதையும் புண்படுத்தியது. பல பிரபலங்களும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "ராதா ரவி அவர்களே, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருக்கும் நான், சமீபத்தில் பெண்களை பற்றி நீங்கள் இழிவாகப் பேசியதற்காகவும், உங்களது முட்டாள்தனத்திற்காகவும் உங்களுக்கு எதிராக கண்டன கடிதத்தில் கையொப்பமட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, இப்பொழுது முதல் உங்களை ரவி என்றே அழைத்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா

    நடிகை நயன்தாராவை பற்றி அவதூறாக பேசிய ராதா ரவியின் பெயரில் இருந்து ராதாவை நீக்கிய நீங்கள் , நடிகர் ராதா ரவியை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க முடியுமா ? ஆண்டாள் பற்றி அவதூறு பேசிய வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை... பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினி யும் இல்லை என்ற அண்ணாவையும்... நாடாவை அவிழ்த்து பாவாடையை தூக்கிப்பார்த்தால் எல்லாம் விளங்கும் என்ற சொன்ன கலைஞரையும் என்ன செய்வதாக உத்தேசம்

  • Jothi - PUDUCHERRY,இந்தியா

    ராதா ரவி அப்பா இருந்திருந்தாலும் இதே போலத்தான் சொல்லுவார்...நேற்று இங்க வந்த நீ இத பத்தி பேச என்ன இருக்கு

  • Jothi - PUDUCHERRY,இந்தியா

    நீ வேற வேலை இருந்தா பாரு தம்பி....ராதாரவி அவங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement