Advertisement

தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்

பிரபல நடிகர் சாய்குமார். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ஆதி சாய்குமார். தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். பிரேம காவாலி என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது ஆபரேஷன் கோல்டு பிஷ், புர்ரா கதா, ஏடு ஜோடு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆதி, தமிழ் சினிமாவிலும் கால்பதிக்கிறார்.

எம்.ஜி.ஆரா சினிமாஸ் சார்பில் காவ்யா மகேஷ், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்தில் ஆதி நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. வேதிகா, ஆதியின் ஜோடியாக நடிக்கிறார். கார்த்திக் - விக்னேஷ் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். சி.சத்யா இசை அமைக்கிறார், நீரவ்ஷா உதவியாளர் கவுதம் ஜார்ச் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement