Advertisement

மகாராஷ்டிராவில் போட்டியிடும் நவ்னித் கவுர்

விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நவ்னித் கவுர். அதன்பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தென்னிந்திய மொழிகள் மற்றும் பஞ்சாபி படங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நவ்னித் கவுர், அந்த மாநிலத்தின் அமராவதி தொகுதி சட்டசபை உறுப்பினர் ரவி ராணாவை திருமணம் செய்து கொண்டார். ரவி ராணா, யுவாபிமானி என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். கணவருக்கு துணையாக அரசியலில் ஈடுபட்ட நவ்னித் கவுர், அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் ரவி ராணாவின் யுவாபிமானி கட்சிக்கு அமராவதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபை உறுப்பினாராக இருக்கும் ரவி ராணா, அமராவதி தொகுதியில் தன் மனைவி நவ்னித் கவுரை நிறுத்துகிறார். நவ்னித் கவுர், அமராவதி தொகுதியில் ஏற்கெனவே பல நற்பணிகளை செய்து வருகிறார். அதனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement