Advertisement

கார்த்தி படத்தில் முக்கிய வேடத்தில் ரெமோ வில்லன்

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் அவரது காதலுக்கு வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் அன்சன் பால். அந்த படத்தை தொடர்ந்து கடந்த வருடம் மம்முட்டியின் தம்பியாக ஆபிரஹாமிண்டே சந்ததிகள்' படத்தில் படம் முழுவதும் வரும் கேரக்டரில் நடித்திருந்தார்.

அதையடுத்து தற்போது மலையாளத்தில் 'தி கேம்ப்ளர்' என்கிற சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் அன்சன் பாலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement