Advertisement

சமந்தா படம் குறித்து பரவிய வதந்தி

திருமணத்திற்கு பிறகு தமிழில் இன்னும் புதிய படங்களில் கமிட்டாகவில்லை சமந்தா. ஆனால் தெலுங்கில் தனது கணவர் நாகசைதன்யாவுடன் மஜிலி மற்றும் ஓ பேபி சக்ககுன்னவே ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் மஜிலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ஏப்ரல் 5-ந்தேதி வெளியாகயிருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனபோதும், சிலபல காரணங்களால் அப்படம் அந்த தேதியில் வெளியாகாது என்று டோலிவுட்டில் மஜிலி படம் குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், நேற்று அப்படக்குழு, மஜிலி படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 5-ந்தேதி வெளியாகும். அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement