Advertisement

நயன்தாரா படத்தில் இணைந்த இன்னொரு கதாநாயகி

நீண்டஇடைவேளைக்கு பிறகு தன் சொந்த மொழியான மலையாளத்தில்,லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை நடிகராக இருந்து இயக்குனராக மாறியுள்ள தயன் சீனிவாசன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் வினித் சீனிவாசனின் தம்பி தான்.

இந்த படம் கோடையில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தற்போது இன்னொரு கதாநாயகியும் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. விமானம் என்கிற படத்தில் பிரித்விராஜ் ஜோடியாக நடித்த துர்கா கிருஷ்ணா என்பவர் இந்த படத்தில் சற்று நீட்டிக்கப்பட்ட ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். இந்தப் படத்தை பிரபல காமெடி நடிகர் அஜு வர்கீஸ் இன்னொரு தயாரிப்பாளருடன் இணைந்த தயாரித்து வருகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement