Advertisement

தெலுங்கில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி

தமிழில் முன்னணி நாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி, 'சைரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். அடுத்து அவர் ஒரு புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடிக்க உள்ள அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப் போகிறாராம். சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் விரைவில் தெலுங்குப் படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். அந்த அறிமுகப் படத்திற்கு அடுத்த படத்தில்தான் அவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.

'சைரா' படத்தில் நடிப்பதன் மூலம் சிரஞ்சீவி குடும்பத்தினருடன் விஜய் சேதுபதி நெருக்கமாகி உள்ளாராம். அவர்கள் கேட்டுக் கொண்டதால்தான் அதைத் தட்ட முடியாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.

ஏற்கெனவே, 'விக்ரம் வேதா, பேட்ட' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாகத்தான் நடித்திருந்தார். இரண்டு படங்களும் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement