Advertisement

உலகளவில் சாதித்து ரூ.7 கோடி பரிசு வென்ற சென்னை சிறுவன்

அமெரிக்காவில் நடந்த பிரபல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த, 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். புகழ்பெற்ற பல இசை மேதைகள் நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், வேகமாக பியானோ வாசித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஏற்கனவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பலகட்ட போட்டிக்கு பின்னர் இறுதிப்போட்டிக்கு லிடியனும் தேர்வானார். இறுதிப்போட்டியில், லிடியன் இரண்டு கைகளால் பியானோ வாசித்து அசத்தி, வெற்றி பெற்றார். அவருக்கு, தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டமும், 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ7. கோடி) பரிசு தொகையையும் வழங்கப்பட்டது.

இதுப்பற்றி லிடியன் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு மீது உலகப்பார்வை விழ தொடங்கி இருக்கிறது, சாதனைகள் தொடரும் என்றார்.

கவுரவித்த ரஹ்மான்

இதனிடையே லிடியனை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை வரவழைத்து கவுரவித்தார். லிடியன், ரஹ்மானின் கேஎம்., இசைப்பள்ளியில் பயின்றவர். அதோடு இந்தப்பள்ளியின் தூதராகவும் லியடினை நியமித்திருக்கிறார் ரஹ்மான்.

லிடியனின் வெற்றி, இந்தியாவின் வெற்றி என ரஹ்மான் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

    அசத்திட்டப்பா..

  • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

    வாழ்த்துகள் மகனே……..மென்மேலும் தொடரட்டும் உன் சாதனைகள்……….

  • Deep - Bangalore,இந்தியா

    Isn't Old news ??

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    வாழ்த்துக்கள்.இறைவன் அருள் எப்போதும் இருக்கட்டும்.மேலும் மேலும் புகழ் அடையட்டும்.

  • Antony Raj - tirunelveli,இந்தியா

    இந்தியாவையும் தமிழகத்தையும் தலை நிமிர செய்ததற்கு எங்களது நன்றியும் வாழ்த்துக்களும்.

  • KayD - Mississauga,கனடா

    சாதனை படைக்கப்பட்ட செய்தி,..

  • KayD - Mississauga,கனடா

    child prodigy ..may god bless you abundantly to go for more and more heights.. niraya niraya success reach aaga alavae illai. best wishes for all your future plans..

  • venkataramanan bv - chennai,இந்தியா

    Hats off Lydian. Am ur fan from your 1st drum performance at age 5. Congrats. Proud as an Indian

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    வாழ்த்துக்கள். பெரிய சாதனை. இந்தியா - தமிழகத்துக்கு புகழ் சேர்த்தமைக்கு நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement