Advertisement

பாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான்

சமீபத்தில், நமது இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள், வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து திரையுலகினர், தங்கள் தரப்பில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் கலைஞர்களை இந்திய படங்களில் பணிபுரிய இனி அனுமதிக்க கூடாது என அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. இதனால் பாலிவுட் நடிகர் சல்மான் கான், தனது படத்திலிருந்து பாகிஸ்தான் பாடகரை அதிரடியாக நீக்கியுள்ளார்.

நடிகர் சல்மான்கான், தற்போது, தயாரித்து வரும் நோட்புக் என்ற படத்தில், பாகிஸ்தான் பின்னணி பாடகர் அஸ்லம் என்பவர் ஒரு பாடலை பாடியுள்ளார். நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களுக்காகவும், அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் உத்தரவுக்கு செவிசாய்க்கும் விதமாகவும், சல்மான்கான் பின்னணி பாடகர் அஸ்லமை தனது படத்தில் இருந்து நீக்கும்படி கூறியுள்ளார்.

ஏற்கனவே அவர் பாடல் பாடி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதை நீக்கிவிட்டு, வேறு ஒரு பாடகரை வைத்து அந்த பாடலை பதிவு செய்யும்படி கூறிவிட்டாராம். அதுமட்டுமல்ல தனது 'பாரத் கி வீர்' என்கிற அறக்கட்டளை மூலம் மிகப்பெரிய தொகை ஒன்றையும் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க உள்ளாராம் சல்மான்கான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement