Advertisement

மகிழ்ச்சியில் ஒரு அடார் லவ் நூரின் ஷெரீப்

ஒரு படத்திற்கு கிடைக்கும் எதிர்பாராத இலவச பப்ளிசிட்டி அதில் நடித்த கதாநாயகிக்கு பயன்பட்ட அளவிற்கு, அந்த படத்திற்கு அது உதவவில்லை என்பது சமீபத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' என்கிற படத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக அனைவருக்கும் அடையாளம் காட்டப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர், கடந்த ஒரு வருடமாக இந்தப் படத்தின் மூலம் கிடைத்த புகழை எப்படி எல்லாம் அனுபவித்தார், பயன்படுத்தினார் என்பது வெட்ட வெளிச்சம்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை அதுமட்டுமல்ல பிரியா பிரகாஷ் வாரியாருக்கு கிடைத்த புகழ் காரணமாக அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இன்னொரு நாயகி நூரின் ஷெரீப் இருட்டடிப்பு செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்ல படத்தின் நிறைய காட்சிகள் எல்லாம் மாற்றப்பட்டு பிரியா வாரியருக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டதால் ரொம்பவே வருத்தத்தில் இருந்தாராம் நூரின். தற்போது படம் வெளியாகியுள்ள நிலையில் அனைத்து விமர்சனங்களிலும் நூரின் ஷெரீப்பின் நடிப்பை அனைவரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர் இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் நூரின் ஷெரீப்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement