Advertisement

முடங்கி கிடந்த படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த மம்முட்டி

மம்முட்டி நடித்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் தன்னுடைய மற்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் மம்முட்டி. மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மதுர ராஜா படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த மம்முட்டி, அடுத்ததாக தற்போது 'உண்ட' என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

நீண்ட நாளைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மம்முட்டியின் தேதி மீண்டும் கிடைப்பதில் காலதாமதம் ஆனதால் இந்தப்படம் முடங்கிக் கிடந்தது. குறிப்பாக மார்ச் 22ஆம் தேதி இந்த படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனம் முதலில் திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் வயநாட்டில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மம்முட்டி கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி பட இயக்குனர் காலித் ரஹ்மான் மிகத் தீவிரமாக இருக்கிறாராம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement