Advertisement

பெட்டிக் கடையில் 3 ஹீரோயின்கள்

Share

லஷ்மி கிரியேசன்ஸ் தயாரிக்கும் படம் பெட்டிக்கடை இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷா பொன்னம்மாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார்.
மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். அருள் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். மரியா மனோகர் இசை அமைக்கிறார். இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். சாந்தினி, அஸ்மிதா, வர்ஷா ஆகியோரின் காதலுக்கு வரும் பிரச்சினைகளை சமுத்திரகனி எப்படி தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. வருகிற 22ந் தேதி வெளிவருகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement