Advertisement

சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து

பொதுவாகவே சமூக பிரச்சினைகளில் தன் மனதில் தோன்றிய கருத்தை சொல்லத் தயங்காதவர் நடிகர் பிருத்விராஜ். ஆனால் சபரிமலை விவகாரத்தில் இவ்வளவு சர்ச்சைகள் ஓடியும் கூட இதுவரை பிருத்விராஜ் அது பற்றி கருத்து எதுவும் கூறாமல் இருந்தார்.. இந்நிலையில் சமீபத்தில் சபரிமலையில் பெண்கள் நுழைந்த நிகழ்வு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிருத்விராஜ்.

“யாராக இருந்தாலும் மலையேற்றம் செய்ய விரும்பினால் அதற்கு வேறு பல சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன, தேவையில்லாமல் சபரிமலையை சர்ச்சையில் சிக்க வைக்காதீர்கள். சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்த பெண்கள் உண்மையான பக்தர்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் யாராக இருந்தாலும் ஆன்மீக விதிகளையும், கோவில் மாண்புகளையும் மதித்து நடக்க வேண்டும்” என கூறியுள்ளார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement