Advertisement

அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்

காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் எல்கேஜி. ப்ரியா ஆனந்த் கதாநாயகி. பிரபுதேவாவிடம் உதவியாளராக இருந்த பிரபு இப்படத்தை இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

அரசியல் நையாண்டி கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலருக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் : வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் தயாரித்து வருகிறேன். எங்கள் தயாரிப்பில் வெளிவரும் முதல் படம் இது. அப்பாவும், நானும் அரசியலில் இருந்து வந்தவர்கள். எங்கள் தயாரிப்பில் முதன்முதலில் அரசியல் படம் வருவது மகிழ்ச்சி. படம் பார்த்தேன் அருமையாக வந்துள்ளது.

இது படம் மட்டும் அல்ல, மக்களுக்கு பாடமும் கூட. படத்தை ஜாலியாக பண்ணியிருக்கிறோம். முதல் பாதி இப்போது இருக்கும் அரசியல் பற்றியும், இரண்டாம் பகுதி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாலாஜி தவிர வேறு யாரும் சொல்ல முடியாது. அரசியல் படம் என்றால் அமைதிப்படையை சொல்வார்கள், அதன்பிறகு, எல்கேஜி என்று இனி அனைவரும் சொல்வார்கள்.

இவ்வாறு பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement