Advertisement

மாண்டியாவில் போட்டியிட நடிகை சுமலதா அம்பரீஷ் விருப்பம்

கன்னட உலகின் பிரபல நடிகராக இருந்த அம்பரீஷ் உடல் நலக் குறைவால், கடந்த ஆண்டு இறந்து போனார். நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் ஜொலித்த அம்பரீஷ், கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதியின் எம்.பி.,யாகவும் இருந்தார்.

நடிகர் அம்பரீஷின் மனைவி - நடிகை சுமலதா. இவர், ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை', 'கழுகு' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர். அம்பரீஷ், இறந்து போன பின், இவருக்கும் அரசியலில் ஆர்வம் வந்து விட்டது. அம்பரீஷ், போட்டியிட்டு வென்ற மாண்டியா தொகுதியில் தானும் போட்டியிட்டு எம்.பி.,யாகி விட வேண்டும் என நினைக்கிறார். இதற்கான, தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

நடிகை சுமலதா, மாண்டியாவில் உள்ள காலபைரவேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என் கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி-தோல்வி குறித்து ஒரு நாளும் கவலைப்பட மாட்டார். அவருக்கு எப்போதும், மாண்டியா தொகுதி மக்கள் மீது அளப்பறிய பாசம் உண்டு. அதனால்தான், அந்தத் தொகுதி மக்களும் அவர் மீது அன்பு வைத்திருந்தனர். அவரை வெற்றி பெற வைத்தனர். அந்த அன்பை, தற்போது நான் தொடர விரும்புகிறேன்.

அம்பரீஷ், கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதனால், காங்கிரஸ் தான் எனது கட்சியும். அந்த கட்சி சார்பிலேயே நானும், மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். வேறு தொகுதியின் மீது எனக்கு ஆர்வம் இல்லாதது போல, வேறு எந்த கட்சியின் மீதும் எனக்கு ஈர்ப்பு எதுவும் கிடையாது.

இவ்வாறு சுமலதா கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement