கடந்த ஆண்டு ஜனவரியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெளியானது. அதையடுத்து, தீபாவளிக்கு செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் என்ஜிகே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. வருகிற பிப்.,14ம் தேதி டீசரும், கோடையில் படமும் ரிலீஸாகிறது.
இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த காப்பான் படம், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தேசப்பற்று கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரதமரின் காப்பாளராக நடிக்கிறார் சூர்யா. அதனால் இந்த படத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
ஆக, இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் என்ஜிகே, காப்பான் என்ற இரண்டு படங்கள் ரிலீசாகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!