Advertisement

பிரதமர் மோடிக்கு விஷால் நன்றி

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு, விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை விபரம் வருமாறு:

பைரஸியால் அழிந்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவையும், பிராந்திய மொழிகளில் வர்த்தக ரீதியிலும் தரமான கலை படைப்பிலும் முதன்மையாக திகழும் தமிழ் திரைப்பட துறையையும் காப்பாற்ற, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள செக்சன் 6ஏ சினிமாட்டோகிராப், சட்டத்தை ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட துறை சார்பாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் சிங்கிள் விண்டோ சிஸ்டமாக திரைத்துறைக்கு சாதகமான ஒரு பிரிவை ஏற்படுத்தி திரைத்துறை பலன் அடைவதற்கான வழி அமைத்ததற்கும் நன்றி. 28 சதவீதமாக ஆக இருந்த திரைத்துறையினருக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதமாக குறைக்க உதவி செய்த, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement