Advertisement

யானையிலிருந்து தவறி விழுந்த ஆரவ்

பிக்பாஸ் புகழ் ஆரவ், ஹீரோவாக நடித்து வரும் படம் ராஜபீமா. யானையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின், முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர். நரேஷ் சம்பத் இயக்குகிறார்.

கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர். நடிகர் ஆரவ் மற்றும் பீட்டர் எனும் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்த பொழுது, துருதிருஷ்டவசமாக யானை மேல் இருந்து கீழே விழுந்தார் ஆரவ்.

படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் அதை பொருட்படுத்தாது படங்களில் நடித்திருக்கிறார். இதை படக்குழு பெருமையாக கூறி வருகின்றனர். ராஜபீமா படம் கோடையில் திரைக்கு வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement