Advertisement

குருசேத்திர போருடன் துவங்கிய விக்ரம் படம்

விக்ரம் நடிப்பில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் மஹாவீர் கர்ணா. ஹிந்தி, மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில், கர்ணனாக விக்ரம் நடிக்கிறார். மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.

ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் மகாபாரத குருசேத்திர போர்க்களக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 1000 துணை நடிகர்களுக்கு மேல் இந்த காட்சியில் பங்கு பெறுள்ளனர்.

“இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. மகாவீர் கர்ணா தொடங்கியது. விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்ஷன் சொன்னது மகிழ்ச்சியளித்தது. கடவுளே நன்றி” என பேஸ்புக்கில் கூறியுள்ளார் இயக்குநர் விமல்.

மொத்தம் 18 நாட்கள் இந்த காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் கிளைமாக்ஸில் அரை மணி நேரம் இந்த போர்க்களக் காட்சி இடம்பெற இருக்கிறதாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement