Advertisement

தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவி

இருட்டறையில் முரட்டு குத்து, செய் உள்ளிட்ட படங்களில் நடித்த, சந்திரிகா ரவி, தமிழ் சினிமாவில் மேலும் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவருடன் பேசியதில் இருந்து:

சினிமா மீது வந்த ஆர்வம் எப்படி?சின்ன வயதிலேயே, சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். 3 வயதிலேயே நடிப்பு, நடனம், மாடலிங் என சென்று, இப்போது, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். சின்ன வயதிலேயே, அம்மா, தமிழ் சினிமாவை பார்க்க சொல்வார். கமல் நடித்த படங்களை அதிகம் பார்ப்பேன்.
முதலில் பாலிவுட்டில் தான் வாய்ப்பு வந்ததா?ஆம், பாலிவுட்டில் இருந்து தான், முதலில் அழைப்பு வந்தது. நான் வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நான் தமிழ் பெண். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும், என் முதல் படம் தென் மாநில மொழி படமாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
தமிழ் சினிமாவைப் பற்றி?தமிழ் சினிமா, ரொம்ப மாறிவிட்டது. நடிகையருக்கான, நல்ல கதையம்சம் உடைய படங்கள் வருகின்றன.
தமிழில் யாருடன் நடிக்க ஆசை?பட்டியலில் நிறைய நடிகர்கள் உள்ளனர். கமல் உடன் நடிக்க ஆசைப்பட்டேன்; தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது; இருவரும் நன்றாக நடனம் ஆடுவர்.
இன்னும் நாயகியாக நடிக்கவில்லையா?இருட்டறையில் முரட்டு குத்து படம் தான், நான் நடித்து முதலில் வெளியான படம். அதன் பின், செய் படம் வந்தது. உன் காதல் இருந்தால் படத்தில் நாயகியாக நடித்துள்ளேன். இது என் மூன்றாவது படம்.
எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்க விருப்பம்?நாயகியாக மட்டுமே நடிக்க விருப்பமில்லை. கதைக்கும் முக்கியத்துவம் உள்ள எல்லா படங்களிலும் நடிக்க ஆசை.
மாடலிங்கில் உள்ள உங்களுக்கு பிடித்த உடை?புடவை உள்ளிட்ட இந்திய உடைகள் மிகவும் பிடிக்கும். என் அம்மாவின் புடவையை அதிகம் பயன்படுத்துவேன்.
உங்களை ஜூனியர் சில்க் ஸ்மிதா என்கின்றனரே...அவரைப் பற்றி நன்கு தெரியும். சமூக வலைதளம் இல்லாத காலத்திலேயே, அவர் பிரபலமாக இருந்தார். அவரது தன்னம்பிக்கை, தைரியம் பிடிக்கும்.
நல்ல கதைகளில் நடிக்கும், மற்ற நடிகையரை பார்த்து பொறாமைப்பட்டது உண்டா?மற்ற நடிகையரை பார்த்து பொறாமைப்படுவதில்லை. அவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் போல், எனக்கும் கிடைக்கும் என, நினைத்துக் கொள்வேன்.
உங்கள் கனவு ரோல் என்ன?கிராமத்து பெண்ணாகவும், வரலாற்று நாயகியரின் பாத்திரத்திலும் நடிக்க ஆசை.
'மீ டூ' விவகாரம் பற்றி...'மீ டூ' விவகாரம் எதிலும் நான் சிக்கியதில்லை. இதில் புகார் கூறுபவர்கள், பொய் சொல்வதில்லை என நினைக்கிறேன். நிறைய பேர், 'நடிப்பதற்கு பாலியல் தொல்லை இருந்ததா... பட வாய்ப்பு எப்படி கிடைத்தது' என, கேட்டனர். நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன். இல்லையென்றால் கவலைப்படுவதில்லை. வாய்ப்பு கேட்டு, யாரையும் தேடிப் போவதில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement