Advertisement

இரண்டாவது இன்னிங்ஸ்!

அங்காடித் தெரு என்ற, 'சூப்பர் ஹிட்' படத்தில் நடித்தவர், மகேஷ். இந்த படத்துக்கு பின், அவரது பெயரே, அங்காடித் தெரு மகேஷ் ஆகி விட்டது. 'தமிழ் சினிமாவில், பெரிய ஹீரோவாக வலம் வருவார்' என, கோலிவுட்டில் பேசப்பட்டது.

அதற்கு பின், யாசகன், வேல்முருகன் போர்வெல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி பெறாததால், மகேஷ் காணாமல் போனார். நீண்ட முயற்சிக்கு பின், தற்போது, என் காதலி சீன் போட்றா என்ற படத்தில் நடித்து வருகிறார், மகேஷ். காதல், காமெடியை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்பதால், இதற்கு பின், தனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறுகிறார், மகேஷ். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக, ஷாலு நடித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement