Advertisement

கத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகம் கடந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் ரஜினிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்தவகையில் அமெரிக்கா, மலேசியா, ஜப்பான் என பல நாடுகளிலும் பேட்டக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கத்தார் நாட்டிலும் பேட்ட, பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. பேட்ட படத்தின் சிறப்பு ரசிகர் மன்ற காட்சி, கத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நடந்தது. அந்நாட்டின் பெரிய திரையரங்கமான ஏசியன் டவுனில் நடந்த காட்சியில் குடும்பம் குடும்பமாக பலர் படத்தை கண்டு ரசித்தனர்.

படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றதோடு, ஒவ்வொருவருக்கும் ரஜினியின் புகைப்படம் கொண்ட 2019 காலண்டரும் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ரஜினி படத்தின் ரசிகர் காட்சிகள் கொண்டாடப்படவதற்கு இணையாக, கத்தாரிலும் ரசிகர் காட்சி இருந்ததாக படம் பார்த்தவர் மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு சென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement