Advertisement

அஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ்

கடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தாண்டு மலையாளத்தில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார். விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் நகைக்கடை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அங்கு, அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்களுடன் பேசிய கீர்த்தி, அவர்கள் முன்பு பாடலுக்கு நடனமும் ஆடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி, தமிழில் இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இங்கு நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. அஜித் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன், வாய்ப்பு வந்தால் உடனே நடிப்பேன் என்றார்.

கீர்த்தி சுரேஷ் வருகையால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement