Advertisement

கதிருக்கும் அடிக்குது சான்ஸ் : விஜய்யுடன் கைகோர்ப்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'சர்க்கார்' படம், சமீபத்தில் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் வைக்கப்பட்ட அரசியல் காட்சிகளுக்காக, அவர் கோர்ட் படியேறும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 'தளபதி 63' என்ற பெயரில், நடிகர் விஜய்யின் அடுத்தப்படம் தயாராகிறது. இயக்குநர் அட்லி இயக்க இருக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ்., எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலரும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கவிருக்கின்றனர்.

தற்போது, 'பரியேறும் பெருமாள்', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் எல்லோரையும் கவர்ந்திருக்கும் நடிகர் கதிர், 'தளபதி 63' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement