Advertisement

மே மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல்?

நடிகர் சங்கத்துக்கு கடந்த 2015ல் தேர்தல் நடந்தது. மூன்றாண்டுகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், அந்தந்த பொறுப்பில் இருக்கலாம். அதன் பின், நிர்வாகத்தில் இருப்பவர்கள் தேர்தலை நடத்தி, முறைப்படி தேர்வு செய்யப்படுகிறவர்களிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். இதுதான் நடிகர் சங்க விதிகளில் கூறப்பட்டுள்ளது.

இப்படித்தான், அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்த சரத்குமார் குழுவினரை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக பொறுப்புக்கு வந்தார் நடிகர் விஷால். அவர், நடிகர் சங்க கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என அறிவித்து, அதற்கான தீவிர முயற்சியில் இறங்கினார்.

இப்போது நடிகர் சங்கத்தின் மூன்றடுக்கு கட்டடம், சென்னை, ஹபிபுல்லா சாலையில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தில், அலுவலக அறை, மாநாட்டுக் கூடம், திருமண அரங்கம், உடற்பயிற்சி கூடம், நடன அரங்கம் உள்ளிட்ட பலவற்றையும் கட்டியுள்ளனர்.

அந்தப் பணிகளெல்லாம், இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. ஏப்ரலில் கட்டடப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்தால், உடனடியாக, திறப்பு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படி திட்டமிட்டபடி, ஏப்ரல் இறுதிக்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டால், வரும் மே மாதத்தில், நடிகர் சங்கத்துக்கான தேர்தலை நடத்த தற்போதைய நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement