Advertisement

விஜய் சேதுபதியை இயக்கும் பொன்ராம்.?

தமிழ் திரைப்பட உலகின் வெற்றி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. 2018ஐ தொடர்ந்து 2019ம் அவருக்கான சிறந்த ஆண்டாகவே பிறந்திருக்கிறது. துவக்கமே ரஜினி நடிப்பில் 'பேட்ட' படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி காமெடி படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' படங்களை இயக்கிய பொன் ராம் தான், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் காமெடி படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement