Advertisement

அஜித்தை வைத்து சரித்திர படம் : சிவா

அஜித்தை வைத்து தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கிவிட்டார் சிவா. சமீபத்தில் வெளியான விஸ்வாசம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பிங்க் படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடிக்க உள்ளார். வினோத் இயக்குகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவா கூறும்போது, அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவரை வைத்து இன்னும் நிறைய படங்கள் இயக்க ஆசைப்படுகிறேன்.

அடுத்து அவருடன் நான் பண்ணும் படம் சரித்திர படமாக இருக்கும், அதற்கான கதையை அஜித்திடம் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் எதிர்காலத்தில் அது நடக்கும் என்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Niyamanavan - Madarasapatnam,இந்தியா

    அஜித்தோட சினிமா வாழ்க்கையை ஏற்கனவே ஒழிச்சிட்டியே சிவா. இன்னும் போதாதா.... விட்டுரு பாவம் அஜித்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அவரால் வீர வசனம் தமிழில் கோர்வையாக பேச முடியுமா, சிடிஸின் படத்தில் நன்கு நடித்தும் வசனத்தில் கோட்டைவிட்டார்

  • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

    சரித்திர படம் எடுப்பதில் எங்களுக்கு மகிழித்தான் ஆனால் நமது இளைய தலைமுறையால் அதுமாதிரி படங்களில் நடிப்பதில் அவர்களால் சரியாக கட்சிதமாக வசனத்தையோ அங்க அசைவுகளை சரியாய் செய்ய இயலாமையை நாங்கள் பார்க்கிறோம்.சரித்திரப்படம் என்றால் எங்கள் கண்முன்னே நிற்பவர்கள் இரண்டுபேர்தான் .மக்கள்திலகமும் நடிகர்திலகமும்தான் .உலகில் அவர்கள் இருவரையும் யாரும் வெல்லமுடியாது .அவர்கள்போல் இப்போது உள்ள நடிகர்களால் நடிக்கமுடியவில்லை இது சற்று வருத்தம் தரக்கூடிய ஒன்றாகத்தான் உள்ளது.சரித்திரப்படத்தில் அவர்கள் இருவரையும்போல் நடிக்கமுடியுமானால் நாங்கள் கண்டிப்பாக தற்போது உள்ள இளைய தலைமுறை நடிகர்களை ஏற்றுக்கொள்கிறோம் .வெற்றி பெற வாழ்த்துகிறோம்

  • Susi - ,

    மீண்டும் மாட்டினான்டா அஜீத். இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கரான்டா. ரொம்ப நல்லவன்டா.

  • Jothi - PUDUCHERRY,இந்தியா

    அதற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் ....வேணுமுநா " வக்கிரம்' வைக்கிரேம்' வாங்கிரம், வேண்டுரேம்...அப்படின்னு "வ" வரிசையில எடு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement