Advertisement

'துளசி'யிலிருந்து தூக்கிய 'தூக்குதுரை'

சிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள 'விஸ்வாசம்' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் நேற்றைய முதல் நாள் தமிழ்நாடு வசூலில் இந்தப் படம்தான் முதலிடத்தில் உள்ளது.

'விஸ்வாசம்' படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தின் கதை பற்றி எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளிவந்தன. நேற்று படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சில தெலுங்கு ரசிகர்கள் 'விஸ்வாசம்' படம் 2007ல் வெளிவந்த 'துளசி' தெலுங்குப் படம் போல இருப்பதாகச் சொன்னார்கள்.

பொயப்பட்டி சீனு இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வெங்கடேஷ், நயன்தாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவருக்கும் ஒரு மகனும் பிறக்கிறான். ஆனால், வெங்கடேஷின் குடும்பம், சொந்த ஊரில் அடிதடி, பஞ்சாயத்து, பிரச்சினை என இருக்கும் குடும்பம். அதில் வெங்கடேஷும் ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பது நயன்தாராவுக்குத் தெரிய வருகிறது. ஒரு சண்டையில் நயன்தாராவின் சகோதரர் கொல்லப்பட, தன் மகனை அழைத்துக் கொண்டு வெங்கடேஷை விட்டுப் பிரிகிறார் நயன்தாரா. மருத்துவ ரீதியாக அவர்கள் மகனுக்கு பிரச்சினை இருக்க, அவரது உயிரைக் காப்பாற்றப் போராடுகிறார் வெங்கடேஷ். ஆபரேஷன் நடக்க இருக்கும் சமயத்தில் வில்லன் கோஷ்டி மகனைக் கடத்துகிறது. வெங்கடேஷ் மகனைக் காப்பாற்றி நயன்தாராவுடன் சேர்வதுதான் படத்தின் கதை.

'துளசி' படத்தின் கதையே சிலபல ஹிந்தி, தெலுங்குப் படங்களின் காப்பி என அப்போது பேசப்பட்டது. அந்த 'துளசி' கதையிலிருந்து 'தூக்குதுரை' கதாபாத்திரத்தையும், அப்படத்தின் நயன்தாராவின் 'வசுந்தரா' கதாபாத்திரத்திலிருந்து 'நிரஞ்சனா' கதாபாத்திரத்தையும் உருவாக்கி 'விஸ்வாசம்' என உருவாக்கிவிட்டார் சிவா. 'துளசி'யில் மகன், 'விஸ்வாசத்தில்' மகள் என்பதும், அதில் வெங்கடேஷ் படித்தவர், இதில் அஜித் படிக்காதவர் என்பது மட்டும்தான் வித்தியாசம். 'துளசி' பாக்ஸ்ஆபிசில் சூப்பர் ஹிட்டாக ஓடியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Prince - Chennai,இந்தியா

  துளசி, விஸ்வாசம் இரண்டு படங்களும் பார்த்து இருக்கிறேன். கதையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் விசுவாசம் பார்க்கும்போது துளசி நினைவுக்கு வரவில்லை.

 • KayD - Mississauga,கனடா

  Thala director aa maathu illai naa un fans ae unaku எதை காட்ட போறாங்க னு உனக்கே தெரியும்..

 • Jothi - PUDUCHERRY,இந்தியா

  சிறுத்தை படமே தெலுங்கு விக்ரமார்குடு ரீமேக் தான்......copy and paste... But now copy and paste with correction- விசுவாசம்

 • Susi - ,

  ஏன்டா இதுவும் சுட்ட வடதானா. அதைக்கூட நல்லா எடுக்கமாட்டீயாடா

 • Ms. K - ,

  எதிர்பார்த்தது தான் , இது மட்டும் இல்லை , ஏனோ சிவா வின் எல்லா படைப்புகளிலும் தெலுங்கு பட சாயல் இருக்கிறது !! ... வேதாளம் படம் கூட ஒரு தெலுங்கு பட சாயல் தான் ,! ஊசரவெல்லி என்று jr.N.T.R , tamannah நடித்த படம் , அதில் tammanna லவ்வர் , இதில் லட்சுமி தங்கை கெரக்டரு ,அவ்ளோ தான் வித்யாசம் , மதப்படி அந்த ஞாபக மறதி எபிசோட் எல்லாம் அதே தான் !!!! ... இந்த ஒழுங்கு ல விஜய் படத்த போய் கலாய்க்க வேண்டியது !!!!

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  படம் டாப் டக்கர். வெரி டீசன்ட்டான படம். குடும்பத்துடன் பார்க்கலாம். தல பக்கா மாஸ்.. சூப்பர்.. நண்பர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.

  • kk - ,

   வுவேகம் ஹார்டு வொர்க் பில்ட அப், விஸ்வாசம் பேமிலி சென்டிமென்ட் பில்ட் அப். ஆனா உண்மையில் படத்தில ஒன்றும் புதுசா இல்ல, அரச்ச மாவு.

 • JMK - Madurai,இந்தியா

  சுட்ட கத இதுக்கு இவ்ளோவ் பில்ட் அப் ? விவேகம் பார்ட் ௨ ? படம் ரொம்ப ஸ்லொவ் ஒரு தடவை பார்க்கலாம் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement