Advertisement

ஒடியனில் பார்வையற்ற பெண்ணாக சனா அல்தாப்

மோகன்லாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'ஒடியன்'. பிளாக் மேஜிக்கை மையப்படுத்தி மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னொரு முக்கிய வேடத்தில் 'சென்னை-28' இரண்டாம் பாகத்தில் ஜெய்யின் ஜோடியாக நடித்த சனா அல்தாப் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் பார்வையிழந்த பெண்ணாக நடித்துள்ளார் சனா அல்தாப். மேலும் ரிவெஞ்ச் திரில்லராக உருவாகியுள்ள இந்த கதையின் போக்கே சனா அல்தாப்பினால் மாறும் விதமாக இவருக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். வரும் டிச-14ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement