Advertisement

முதல்வன் 2 : மூன்று நடிகர்களை பரிசீலித்த ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் வெளியான படம் முதல்வன். 2.0 படம் வெளியாவதற்கு முன்பிருந்தே முதல்வன் இரண்டாம் பாகம் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர்.

கமலை வைத்து இயக்கும் இந்தியன்-2 படத்தை அடுத்து முதல்வன்-2 படத்தை இயக்கும் எண்ணம் ஷங்கருக்கு உள்ளதாம். இதில், ரஜினி, கமல் அல்லது விஜய் ஆகிய மூவரில் ஒருவர் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதும் அவர், தற்போதைய நிலவரப்படி அந்த கதைக்கு விஜய் சரியாக இருப்பார் என கூறுகிறார். என்றாலும், இந்தியன் 2 படம் வெளியான பிறகே, முதல்வன்-2 படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற இறுதி முடிவை அவர் எடுப்பேன் என்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Anvardeen - chennai,இந்தியா

    ௨.௦ மாதிரி மொக்கை படம் எடுக்காதீர்கள் முடியல இந்தியன் படம் மாதிரி எதார்த்தமான சிறந்த கதை அம்சமுள்ள படமே வேண்டும்

    • JMK - Madurai,இந்தியா

      சர்க்கார் / விவேகம் மாதிரி கேவலமான படத்தை எடுக்காதீர்கள் அப்படியே எடுத்தாலும் விஜய் / அஜித் போன்ற லோக்கல் நடிகர்களை ஹீரோவாக செலக்ட் செய்யாதீர்கள் ?

    • JMK - Madurai,இந்தியா

      அன்வர் ௨.௦ மொக்க படமா ? அந்த மொக்க படம் இது வரை 700 cr வசூல் செய்துள்ளதே ? சர்க்கார் நல்ல படமா ? அது ஏன் இருநூறு கோடி கூட தாண்டவில்லை ?

  • pooran -

    Story and Screen play are most important than other things...please mind it

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

    உங்கள் கதை மீது நம்பிக்கை இருந்தால்..புதுமுகத்தைக்கூட போடலாம்.. ஒரு படமாவது பிரம்மாண்டம் தவிர்த்து யதார்த்தமாய் எடுங்களேன்..

  • kalai - ,

    விஜய் இருந்தா நல்லா இருக்கும்

  • Sundar - Puducherry,இந்தியா

    அஜித் ஸ் தி பெஸ்ட் சாய்ஸ்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement