Advertisement

கடத்தப்பட்ட சீனிவாசனின் மனைவி மீட்பு : 4 பேரிடம் விசாரணை

அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து, சினிமா நடிகர் ஆனவர் சீனிவாசன். தனக்குத்தானே பவர் ஸ்டார் பட்டம் போட்டுக் கொண்டு காமெடியனாக படங்களில் நடித்து வந்தார். கடன் வாங்கித் தருவதாக பலரிடம் வாக்குறுதி கொடுத்து பல கோடி ஏமாற்றியதாக இவர் மீது பல வழக்கு உள்ளது. அடிக்கடி ஜெயிலுக்கும் போவார். அடிக்கடி படங்களில் நடிக்கவும் செய்வார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசனின் மனைவி ஜூலி, தனது கணவரை காணவில்லை என்று அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, சீனிவாசன் தான் ஊட்டிக்கு வந்திருப்பதாகவும், நிலபத்திர பதிவு செய்ய வேண்டியதன் காரணமாக வந்திருப்பதாகவும் போலீசுக்கு தெரிவித்திருக்கிறார். மனைவி ஜூலியும் தன்னுடன் தான் இருக்கிறார் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சீனிவாசன் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினர். மேலும் தனது மனைவி ஜூலியை கடத்தி ஊட்டியில் 11 பேர் சிறை வைத்துள்ளதாக போலீசாரிடம் புகார் கூறியுள்ளார் சீனிவாசன். இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஊட்டியில் இருந்த ஜூலியை மீட்டதோடு, இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    என்னப்பா நாடகம் இது...முன்பு அந்தம்மா உன்னை காணேம் என்கிறது... இப்[போ அந்தம்மா காணோம் என்று நீ சொல்லுரே

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    நம் நாட்டில் அடாவடி அராஜகம் மற்றும் சொத்து மோசடி போன்றவைகளை செய்ய அரசியல் வாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை . இந்த செயல்களை யாரும் எந்த தடையும் இல்லாமல் செய்யலாம் என்பதை பவர் ஸ்டார் நிரூபித்துள்ளார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement