Advertisement

சர்காருக்கு மட்டும் விளம்பரமா.? - சி.எஸ்.அமுதன் கிண்டல்

சர்கார் படத்திற்கு எழுந்த தொடர் பிரச்னைகளால், எங்குபார்த்தாலும் அந்தப்படம் பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் இது சர்ச்சை என்பதை விட படத்திற்கு கூடுதலாக கிடைத்த பப்ளிசிட்டி என்று தான் சொல்ல வேண்டும்.

சர்கார் படத்திற்கு திரை உலகினர் பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கி சிஎஸ் அமுதன் டுவிட்டரில் கிண்டலாக ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், "எங்களுக்கு இந்த மாதிரி விளம்பரம் கிடைக்கவில்லை என்பதால் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். நாங்களும் அரசை விமர்சிக்க கடுமையாக முயன்றோம். இந்த பாரபட்சத்தை ஏற்க முடியாது. நாங்கள் சர்காருக்குத் துணை நிற்கிறோம்” என பதிவிட்டிருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement