Advertisement

அலியாபட்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மகேஷ்பாபுவின் மகள்

வம்சி இயக்கும் மகரிஷி படத்தில் தற்போது நடித்து வருகிறார் மகேஷ்பாபு. பூஜாஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. மகேஷ்பாபுவுடன் அவரது குடும்பத்தினரும் நியூயார்க் சென்றுள்ளனர்.
மேலும், மகேஷ்பாபு குடும்பத்தினர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் இந்தி நடிகை அலியாபட்டும் தங்கியிருந்து ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில், அலியாபட்டின் தீவிரமான ரசிகையான மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா, எதேச்சையாக அவரை அதே ஹோட்டலில் பார்த்து இன்ப அதிச்சியடைந்துள்ளார். அதோடு, அலியாபட்டுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் சித்தாரா. அந்த போட்டோக்கள் இணைய தளத்திலும் வெளியாகியிருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement