Advertisement

சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்

மீ டூ விவகாரத்தில் இயக்குனர் லீலா மணிமேகலையின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் இயக்குனர் சுசி கணேசன். இதைத் தொடர்ந்து லீலா மணிமேகலை மீது, அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் சுசி கணேசன்.

மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் சித்தார்த், லீலா மணிமேகலைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதை விரும்பாத இயக்குனர் சுசி கணேசன், சித்தார்த்தின் வீட்டிற்கு போன் செய்து அவரது தந்தையிடம் லீலா மணிமேகலை விஷயத்தில் சித்தார்த் ஆதரவு தரக்கூடாது என கூறி மிரட்டியதாக, சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சுசி கணேசனின் மிரட்டலை தொடர்ந்து முன்பை விட லீலா மணிமேகலைக்கு தனது பலமான ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளார் சித்தார்த்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement