Advertisement

செப்-14ல் மம்முட்டி படம் திடீர் ரிலீஸ்

கேரளாவை சமீபத்தில் உலுக்கிய மழை வெள்ளம் காரணமாக மலையாள படங்களின் ரிலீஸ் தேதியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக கடந்தவாரம் ரணம், தீவண்டி என இரண்டு படங்கள் ரிலீசாக, இந்த வாரம் (செப்-14) பிஜுமேனனின் படையோட்டம் படம் மட்டுமே ரிலீஸாவதாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்டநாடன் பிளாக் படம் திடீர் ரிலீசாக உள்ளே நுழைந்துள்ளது.

மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான சேது ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். இந்தப்படத்தில் ஐந்தாவது முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. தவிர இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் பூர்ணா. இவர்கள் தவிர வளர்ந்து வரும் இளம் நடிகையான அனு சித்தாராவும் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இந்தப்படத்தில் பிளாக் எழுத்தாளராக நடிக்கிறார் மம்முட்டி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement