Advertisement

செல்வராகவனை வியக்க வைத்த சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால், கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடிக்கத் தொடங்கினார் சூர்யா. இதன்காரணமாக, என்ஜிகே திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளிவராதோ என்று அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, முடிந்தளவு படத்தை விரைவாக முடிக்க முயற்சி எடுக்கிறோம் என்றார். இந்தநிலையில், என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதையடுத்து தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அதில், என்ஜிகே படத்திற்காக சூர்யா செய்து வரும் அர்ப்பணிப்பையும், அவரது நடிப்பையும் பார்த்து வியந்து விட்டேன் . இந்த அளவுக்கு ஒரு கேரக்டருக்காக அர்ப்பணிப்புடன்கூடிய கடினமான உழைப்பை சூர்யாவினால் மட்டுமே கொடுக்க முடியும். நான் இதுவரை இயக்கிய நடிகர்களில் மீண்டும் ஒரு நடிகருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றால் அது சூர்யாவாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement