Advertisement

தமிழிலும் வெளிவருகிறது காயம்குளம் கொச்சுண்ணி

மலையாள சினிமா உலகில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் காயம்குளம் கொச்சுண்ணி. இது ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு எதிராக போராடியதுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுத்த மலையாளத்து ராபின்ஹூட்டின் வரலாற்று கதை. இதில் காயம்குளம் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். அவருடன் பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், பாபு ஆண்டனி, சன்னி வெய்ன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பினோத் பரதன் ஒளிப்பதிவு செய்கிறார், கோபி சுந்தர் இசை அமைக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ரோஷன் ஆண்ட்ரீவ்ஸ் இயக்குகிறார்.

இந்தப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, மலையாளத்தில் வெளியாகும் அன்றே தமிழிலும் வெளியிடப்பட இருக்கிறது. கொச்சுண்ணியின் கதை கன்னியாகுமரி பகுதியிலும் நடப்பதால் தமிழில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பாடல்கள், வசனங்களை மதன் கார்க்கி எழுதுகிறார். படத்துக்கு எம்.ஜி.ஆர் நடித்த புகழ்பெற்ற படமான மலைக்கள்ளன் என்ற டைட்டிலை வைக்க முயற்சி நடக்கிறது. முறைப்படி அனுமதி பெற ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கிடைக்காவிட்டால் வேறு தலைப்பு வைக்கப்படும் என்று தெரிகிறது. மலைக்கள்ளன் படமும் இதே போன்ற ராபின்ஹூட் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement