Advertisement

களவாணி சிறுக்கியில் கிராமத்து காதல்

Share

இயக்குனர் சற்குணம் தனது களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் அதே நேரத்தில் களவாணி சிறுக்கி என்ற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது. ராணா கிரியேசன்ஸ் சார்பில் நமச்சிவாயம் தயாரிக்கும் இந்தப் படத்தை நடிகர் ரவிராகுல் இயக்குகிறார். சாமி, திவாகர், சங்கர்கணேஷ் என்ற 3 புதுமுகங்கள் ஹீரோக்களாகவும் அஞ்சுகிரிட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மோகன் டச் ஒளிப்பதிவு செய்கிறார், தருண் ஆண்டனி இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரவிராகுல் கூறியதாவது :

ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுற விதம் நல்ல விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும், அல்லது தவறான விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும் . அது அவரவர்கள் புரிந்துக்கொள்கிற மனப்பக்குவத்தை பொருத்தது. கிராமத்தில் இருக்கிற பெண் ஒருத்தி ஒரு வாலிபனிடம் எதார்த்தமாக பழகுகிறாள், ஆனால் அதில் ஒருத்தன் அதை தவறாக நினைத்து அவளிடம் தப்பாக நடக்க முயல்கிறான். இறுதியில் அவன் நினைத்தது நடந்ததா, இல்லை என்ன பிரச்சனைகளை அவன் சந்தித்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, பொள்ளாச்சி, ஈரோடு அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. என்கிறார் ரவிராகுல்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement