Advertisement

நயன்தாராவால் வெளிநாடுகளிலும் பிரபலமான யோகிபாபு

சந்தானம், சூரிக்குப்பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாகியிருப்பவர் யோகிபாபு. அதோடு, சில படங்களில் கதாநாயகிகளை ஒன்சைடாக லவ் பண்ணும் வேடங்களிலும் நடித்து வரும் யோகிபாபு, ரொமோ படத்தில் நர்ஸ் கெட்டப்பில் நடித்த சிவகார்த்திகேயனை ஒன்சைடாக லவ் பண்ணினார். அந்த நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

அதையடுத்து இப்போது கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒன்சைடாக காதலிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபு இணைந்து நடித்துள்ள எனக்கு கல்யாண வயசு வந்துருச்சு என்ற பாடல் யு டியூப்பில் வெளியாகி 2 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.
இதன்காரணமாக தற்போது உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமாகி விட்டார் யோகிபாபு. அந்த வகையில், விஜயசேதுபதியுடன் அவர் நடித் துள்ள ஜூங்கா படப்பிடிப்புக்காக பாரிஸ் சென்றபோது, யோகிபாபுவைப்பார்த்து இவர்தானே நயன்தாராவுடன் நடித்தவர் என்று சொல்லி அவருடன் நின்று அங்குள்ள தமிழ் ரசிகர்கள் செல்பி எடுத்து சென்றுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement