Advertisement

நித்யா மேனன் பட டிரைலர் இன்று துபாயில் வெளியீடு

நித்யா மேனன் தற்போது மலையாளத்தில் 'ப்ரண' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நித்யா மேனன் எழுத்தாளராக நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் இந்தப்படம் தயாராகியுள்ளது. நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடித்திருக்கிறார் நித்யா மேனன்..

அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் ஒரு ஜாஸ் பாடலையும் பாடியுள்ளார் நித்யா மேனன். இந்தப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை துபாயில் உள்ள மிக பிரமாண்டமான புர்ஜ் அல் அரப் ஹோட்டலில் வைத்து நடைபெற உள்ளது..இதையடுத்து படக்குழுவினர் துபாயில் முகாமிட்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement