Advertisement

மார்ச்-9ல் அபியும் அனுவும் ரிலீஸ்..!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி, கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப்பின் இயக்கியுள்ள படம் தான் 'அபியும் அனுவும்'. இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் இதற்கு 'அபியுடே கத அனுவிண்டேயும்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் இளம் நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழிலும் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் பிரபு, சுகாசினி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் பியா சில காட்சிகளில் மொட்டைத்தலையுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக வேண்டிய இந்தப்படம், தற்போது வரும் மார்ச்-9ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement