Advertisement

'நாச்சியார்' உடன் போட்டி போடும் மற்ற படங்கள் ?

பிப்ரவரி மாதத்திலும் வாரத்திற்கு ஐந்து படங்கள் வருவது வாடிக்கையாகிவே இருக்கிறது. கடந்த ஆறு வாரங்களில் வெளிவந்த சுமார் 20 படங்களில் ஒரு படம் கூட பெரிய லாபத்தைத் தரவில்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் படங்களை வெளியிட்ட பலரும் சாதனை வெற்றி, பிரம்மாண்ட வெற்றி என்று விளம்பரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

2017ம் வருடத்திய நிலைமை இந்த வருடமும் வந்துவிடுமோ என தியேட்டர்காரர்கள் கலக்கத்தில் உள்ளார்கள். இருந்தாலும் இந்த ஆண்டு பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வருவதால் தியேட்டர் வசூல் நன்றாக இருக்கம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி “நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'நாச்சியார்' படம் மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இருக்கிறது. மற்ற படங்கள் எப்போதே வெளிவந்திருக்க வேண்டிய படங்கள். பல தாமதங்களுக்குப் பிறகு வர உள்ளன.

'நாச்சியார்' படம் சுமார் 300 தியேட்டர்களில் மட்டுமே வெளியாவதால் இந்தப் படங்களுக்கு இந்த வாரம் ஓரளவிற்காவது தியேட்டர்கள் கிடைக்கும். அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் தேர்வு ஜுரம் ஆரம்பமாகிவிடும். இன்னும் ஒரு மாதத்திற்கு பெரிய படங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement